விருதாசலம் காங்கிரஸ் வேட்பாளர் மனு தாக்கல்
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர். ராதா கிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்;
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் ஆர். ராதாகிருஷ்ணன்இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
முன்னதாக தேசிய முற்போக்கு கூட் டணியின் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களோடு ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் சார்ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சார்ஆட்சியர் பிரவீன்குமாரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் கூறும்போது, திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி கொடுத்ததை போல விருத்தாசலத்தை கடலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து தனி மாவட்டமாக அமைக்க எல்லா வகையிலும் நாங்கள் பாடுபடுவோம். தொகுதி மக்களின் நலனில் அக்கறையோடு செயல்பட்டு அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வோம். விருத்தாசலம் தொகுதியில் மக்களின் தொண்டனாக நான் பணியாற்றுவேன் என உறுதி கூறினார்