விருதாச்சலம் அம்மா உணவக பணியாளர்கள் பணிநிரந்தரம் வேண்டி அமைச்சரிடம் மனு
விருதாச்சலம் அம்மா உணவக பணியாளர்கள் அமைச்சர் சி.வெ.கணேசனை நேரில் சந்தித்து தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்தனர்;
அமைச்சர் சி.வெ.கணேசனை நேரில் சந்தித்த விருதாச்சலம் அம்மா உணவக பணியாளர்கள்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் சுமார் 6 ஆண்டுகளாக அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இதில் சுமார் 10க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்களை நேரில் சந்தித்து தங்களின் பணிகளை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் கோரிக்கையை முதல்வரின் பார்வைக்கு கொண்டுசெல்வதாக கூறினார்.