நெல்லிக்குப்பத்தில் எம்எல்ஏ வேல்முருகன் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்
நெல்லிக்குப்பம் பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர் பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன்.;
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவருமான வேல்முருகன் நெல்லிக்குப்பம் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மார்க்கெட் பகுதிகளில் கொரோனா பெரும் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர மக்களிடமும் வியாபாரிகளிடமும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், மக்கள் பாதுகாப்புடன் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். உங்களுக்காக எப்போதும் பணிசெய்ய காத்துக் கொண்டு இருக்கிறேன். ஆகவே நீங்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, பொறியாளர் கிருபாகரன், துப்புரவு அலுவலர் சக்திவேல், பணி மேற்பார்வையாளர் வாசு உட்பட பலர் உடனிருந்தனர்.