நெல்லிக்குப்பத்தில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனம் துவங்கப்பட்டது

நெல்லிக்குப்பத்தில் அத்தியாவசிய பொருட்கள், காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய நடமாடும் காய்கறி வாகனங்கள் துவங்கப்பட்டது;

Update: 2021-05-24 13:00 GMT

நெல்லிக்குப்பத்தில் அத்தியாவசிய பொருட்களை வாகனம் மூலம் குடியிருப்புப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி துவக்கம் 

அத்தியாவசிய பொருட்களை வாகனம் மூலம் குடியிருப்புப் பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார் நகராட்சி ஆணையர்

 அரசு உத்திரவின் படி, நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் தனியார் மூலமாக நடமாடும் காய்கறி / பழங்கள் / மளிகை விற்பனை அங்காடியினை நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி தலைமையில் பண்ருட்டி சமூக திட்ட பாதுகாப்பு வட்டாட்சியர் துவக்கி வைத்தார்.

அச்சமயம் நகராட்சி துப்புரவு அலுவலர் டி.சக்தி வேல் மற்றும் அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர். நெல்லிக்குப்பம் பகுதியில் விற்பனை 21 வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இன்று 10 வாகனங்கள் வார்டு பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் காய்கறி பழங்கள் விற்பனை செய்யும் வாகனங்களை அனுப்பி வைத்தனர்

Tags:    

Similar News