தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கடலூரில் கொரோனா கட்டுப்பாட்டு மையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடலூர் வடக்கு மாவட்டம் சார்பில் நெல்லிக்குப்பத்தில் கொரோனா கட்டுப்பாடு உதவி மையம் திறக்கப்பட்டது

Update: 2021-06-02 11:27 GMT

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடலூர் வடக்கு மாவட்டம் சார்பில் நெல்லிக்குப்பத்தில் கொரோனா கட்டுப்பாடு உதவி மையம் திறக்கப்பட்டது

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் உள்ளானவர்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் இன்று பேரிடர் உதவி மையம் திறக்கப்பட்டது. இந்த மையத்தை கடலூர் மாவட்ட துணை ஆட்சியர் ஜெகதீஸ்வரன் அவர்கள் திறந்து வைத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தின் சேவைகளை பாராட்டினார் .

இந்த மையத்தின் மூலம்  தொற்று பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனை அழைத்துச் செல்வது, நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கபசுர குடிநீர் வழங்குதல், மருத்துவமனை தகவல்கள், ஆக்சிஜனுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை, அவசர இரத்த தான சேவை, ரத்த தான முகாம், மரணம் அடைந்தவர்களுக்கு உடல் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்தல் போன்ற பேரிடர் உதவிகள் செய்யப்படும் என்று மாவட்ட தலைவர் சேட் முகமது கூறினார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சேட்முகமது தலைமை ஏற்றார் மாவட்ட செயலாளர் காதர் பாஷா பொருளாளர் உமர்பாரூக் துணைத் தலைவர் யாசின் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உதவிக்கு அழையுங்கள் 7397735100.

Tags:    

Similar News