நெல்லிக்குப்பத்தில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரைந்த தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தினர்

நெல்லிக்குப்பத்தின் நெல்லிக்குப்பம் ஓவியர்கள் சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது.

Update: 2021-05-28 12:20 GMT

நெல்லிக்குப்பத்தில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரைந்த தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தினர்

நெல்லிக்குப்பத்தின் மைய பகுதியான அண்ணாசிலை அருகே நெல்லிக்குப்பம் ஓவியர்கள் சங்கம்  சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது.அதில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வலியுறுத்தியும், கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்படுத்தி கொள்ளவும்,சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், முன்களப்பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியம் வரையப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், வர்த்தக சங்க செயலாளர் ஜெ.ராமலிங்கம், தேமுதிக நகர செயலாளர் கஜேந்திரன், சமூக ஆர்வலர் சீசப்பிள்ளை கலந்து கொண்டனர் இதில் நெல்லிக்குப்பம் ஓவியர் சங்கத்தின் நகர தலைவர் நாகராஜன், செயலாளர் கார்த்திக், பொருளாளர் ரம்யா ஆர்ட்ஸ் மற்றும்  ஓவியர்கள் சங்க பிரதிநிதிகள்,  நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News