பண்ருட்டியில் தொடர் சாராய கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் தடுப்புக்காவலில் கைது

பண்ருட்டி பகுதியில் தொடர்ந்து சாராயக்கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

Update: 2021-07-31 12:29 GMT

தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நபர்

மதுகடத்தலை தடுக்கும் பொருட்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை ரயில்வே கேட் அருகில் பண்ருட்டி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர்  செந்தில்குமார், உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த கீரப்பாளையம் மேற்கு தெருவை சேர்ந்த  காசிலிங்கம் (எ) காட்டுராஜா ( 51) என்பவரை நிறுத்தி சோதனை செய்து பார்த்த போது இரு பாலித்தீன் பைகளில் சுமார் 110 லிட்டர் சாராயம் வைத்திருந்தது தெரிய வந்தது, உடனே அவர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, சிறையில் அடைக்கப்பட்டார்.

பண்ருட்டி மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர்(பொறுப்பு) திருமதி. பத்மா அவர்கள் விசாரணை மேற்கொண்டதில் காசிலிங்கம் (எ) காட்டுராஜா மீது நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் 3 சாராய வழக்குகளும், காடாம்புலியூர் காவல் நிலையத்தில் ஒரு சாராய வழக்கும் இருப்பது தெரியவந்தது. இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் அவர்களின் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர்  பாலசுப்ரமணியன் ஓராண்டு காலம் தடுப்புக்காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் ஓராண்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.

Tags:    

Similar News