கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2021-07-19 08:00 GMT

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த மத்திய அரசு தலையிட கோரியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் வெற்றி வீரன் தலைமை தாங்கினார், வட்டத் தலைவர் பொன்னம்பலம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க குமராட்சி ஒன்றிய தலைவர் முனுசாமி, ஒன்றிய செயலாளர் பாலமுருகன்,  ஜி.ஆர்.ரவிச்சந்திரன், பிரகாஷ், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள், விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News