இரவில் சத்தமாக பேசியவர் கம்பியால் அடித்துக்கொலை; சரணடைந்த குற்றவாளி
ஸ்ரீமுஷ்ணம் அருகே இரவில் சத்தமாக பேசியவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு குற்றவாளி சரணடைந்தார்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கொளத்தகுறிச்சி மேல வீதியில் வசிப்பவர் ராஜேந்திரன்( 55) இவர் விரைவில் மகளின் திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமணத்தைப் பற்றி குடும்பத்தாருடன் பேசிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இவர் வீட்டின் அருகில் இருந்த அர்ஜுனன் மற்றும் அவரது மகன்கள் சுந்தர்ராஜன்(36), ராமகிருஷ்ணன்(33), ஆகிய இருவரும் ராஜேந்திரனிடம் சென்று இரவு நேரத்தில் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் தூங்க வேண்டாமா நீங்கள் பேசிக் கொண்டிருப்பது எங்களுக்கு தொந்தரவாக இருப்பதாக கூறி மதுபோதையில் கேட்டுள்ளார்.
இவர்களுக்குள் தகறாறு ஏற்பட்டதால் இரும்பு கம்பியால் ராஜேந்திரனை தலையில் தாக்கியதால் பலத்த காயமடைந்தார்.ஆபத்தான நிலையில் இருந்த ராஜேந்திரனை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ஸ்ரீமுஷ்ணம் காவல் துறையினர் சுந்தர்ராஜன் அதே பகுதியில் தனிப்படை போலீசார் அதிரடியாக அர்ஜுனன் மற்றும் சுந்தரராஜன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். ராமகிருஷ்ணன் பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சத்தமாக பேசிக்கொண்டு இருந்ததால் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.