கடலூர் மாவட்டத்தில் இறால் பண்ணைகளை அகற்ற இளைஞர்கள் கலெக்டரிடம் மனு
இறால் பண்ணையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி இளைஞர்கள் கடலூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பரங்கிப்பேட்டையை அடுத்த பு.மடுவங்கரை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த மடுவங்கரை கிராமத்தின் கிழக்குப் பகுதியில் சட்டவிரோதமாக 15க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகளை அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கழிவுகள் புகாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த போதிலும் அரசின் எந்த வழிகாட்டு நெறிமுறையும் பின்பற்றாமல் புதிதாக இறால் பண்ணைகளை அமைத்துள்ளனர். இதனால் விவசாய விளை நிலங்களில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி கொண்டிருக்கிறது.
இதனை கருத்தில்கொண்டு மாவட்ட ஆட்சியர் இப்பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இறால் பண்ணைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.