சிறுமிக்கு மிரட்டி விஷம் கொடுத்த வழக்கில் சிறையிலிருந்த வாலிபர் 'சீரியஸ்'
சிறுமிக்கு மிரட்டி விஷம் கொடுத்த வழக்கில் சிறையிலிருந்த வாலிபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.;
பண்ருட்டியில் சிறுமிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சின்ன பேட்டை சேர்ந்தவர் சிவகுமார். இவருடைய மகன் பாண்டியன் வயது 19. சிறுமியை மிரட்டி விஷம் கொடுத்து கொலை முயற்சி மற்றும் பாலியல் தொந்தரவு செய்த பாண்டியனை இரு பிரிவுகளில் வழக்கு செய்து கடலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு சிறைச்சாலையில் பாண்டியன் தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதில் ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கெனவே இந்த சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக பாண்டியனை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு வெளியில் வந்துள்ளது. பின்னர், சிறுமிைய சந்தித்து மிரட்டி விஷம் கொடுத்ததால் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.