மேகதாது அணை விவகாரம்: சிதம்பரத்தில் தமிழர் நீதிக் கட்சி ஆர்ப்பாட்டம்
மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் தமிழர் நீதிக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
கர்நாடகா மேகதாது அணை திட்டத்தை கண்டித்து கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழர் நீதிக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கட்சியின் தலைவர் சுப. இளவரசன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை நிகழ்த்திய தமிழர் நீதிக் கட்சியின் தலைவர் சுப இளவரசன் பேசுகையில், கர்நாடக அரசு அணை கட்டினால் முதல் அணுகுண்டாக நான் இருப்பேன் அதை சுக்குநூறாக உடைத்து எறிவேன் என்று கூறினார்.
மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக அரசை வஞ்சிக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அனைவருமே பெற்ற தாய் தந்தை போல் மதிக்க வேண்டும். நதிநீர் பிரச்சனையில் கர்நாடக அரசுக்கு சாதகமாக நடந்து கொள்கிறது,கர்நாடக அரசு தமிழர்களை மதிப்பதே கிடையாது. எனவே மத்திய அரசுக்கு தமிழக அரசு மிகக் கடுமையாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதில் அக்கட்சியின் நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கர்நாடக அரசை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.