சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத்திற்கு அனுமதி-மாவட்ட ஆட்சியர் தகவல்

20ம் தேதி ஆருத்ரா தரிசன விழாவிற்கு மட்டும் அனுமதி அளித்திருந்த நிலையில் பக்தர்களின் போராட்டத்தால் தேரோட்டத்திற்கும் அனுமதிகிடைத்துள்ளது.

Update: 2021-12-18 17:41 GMT

கடலூர் கலெக்டர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது, நாளை 19ம் தேதி தேரோட்டமும்,20 தேதி ஆருத்ர தரிசன விழாவும் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆரம்பத்தில் ஆருத்ரா தரிசன விழாவிற்கும், தேரோட்டத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அனுமதி கேட்டு பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், அரசியல் கட்சியினர் தரிசனத்திற்கு அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்த நிலையில் நாளை மறுநாள் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவிற்கு மட்டும் அனுமதி அளித்து உத்திரவிடப்பட்டிருந்த நிலையில்  பக்தர்கள், பாஜக,இந்து முன்னணியினர் கோயில் எதிரே சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 

போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் தேரோட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தார்.சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து குறைந்த அளவிலான பக்தர்களோடு தேரோட்டம் நடத்த வேண்டுகோள் விடுத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாய்மொழியாக அறிவித்ததை மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கை மூலம் வெளியிட்டார்.

Tags:    

Similar News