சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில் மிக பிரம்மாண்டமான கொலு
21 பெரிய படிகள் அமைத்து, ஆயிரக்கணக்கான பொம்மைகள் விளங்க, கலை நயம் பொங்கும் வகையில் கொலு அமைக்கப்பட்டுள்ளது.
புரட்டாசி அமாவாசைக்கு மறுநாளில் இருந்து நவராத்திரி கொண்டாடப்படுகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில் மிக பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலின் கிழக்கு கோபுர வாயிலின் வழியாக வந்து, 21படி வாசல் எனும் நுழைவாயிலைக் கடந்ததும், வலது புறத்தில், அமைந்த கொலு மண்டபத்தில், சுமார் 30 அடி நீளம், 30 அடி அகலம், 30 அடி உயரம் என பரந்து விரிந்திருக்கும் மேடையில், மிக மிக பிரம்மாண்டமாக 21 பெரிய படிகள் அமைத்து, ஆயிரக்கணக்கான பொம்மைகள் விளங்க, கலை நயம் பொங்கும் வகையில் கொலு அமைக்கப்பட்டுள்ளது.
இதிகாச, புராண கருத்துக்களை எடுத்துரைக்கும் வகையிலும், நமது பாரம்பரியத்தினையும், திருவிழாக்களையும், பழமைகளையும் சொல்லும் விதமாகவும்,தெய்வீகமும், கைவண்ணமும், கலையம்சமும் இணைந்து இருபத்தி ஒரு படிக்கட்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நவராத்திரி கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பார்த்து வழிபட்டுச் செல்கின்றனர்.