சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ்

சிதம்பரம் நகரில் 144 தடை உத்தரவு மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலால் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-25 03:06 GMT

பைல் படம்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர் சன்னிதியில் மேடையேறி தேவாரம் திருவாசகம் பாடுவது சம்பந்தமாக ஏற்பட்டுள்ள சட்டப் பிரச்சனைகள் காரணமாக அரசின் அடுத்த முடிவு குறித்து சட்ட வல்லுனர்களால் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று ஒரு மாத காலத்திற்கு சிதம்பரம் நடராஜர் கோவில் சம்பந்தமாக அரசியல் கட்சிகள் சமூக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக சிதம்பரம் ஆர்.டி.ஓ. ரவி உத்தரவு பிறப்பித்து அறிவிப்பு வெளியிட்டார்.

மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் சிதம்பரம் நகரில் போடப்பட்ட 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுகிறது என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News