சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோட்டாட்சியர் அறிவித்துள்ளார்.

Update: 2021-12-10 11:07 GMT

சிதம்பரம் நடராஜர் கோயிலின்  எழில்மிகு  தோற்றம் (பைல் படம்)

உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா திருவிழா இம்மாதம் 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இம்மாதம் 19-ம் தேதி தேரோட்டமும்,20ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும்  நடைபெற உள்ளது.

இந்த நிலையில் விழா குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.கொரோனா தொற்று காரணமாக டிச.15 வரை ஊரடங்கு அமலில் உள்ளது.எனவே திருவிழாக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக தேர் மற்றும் தரிசன விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படாது என ஆர்.டி.ஓ. ரவி தெரிவித்தார்.

பொதுமக்கள் பங்கேற்று விழாவை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தீட்சிதர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து தீட்சிதர்கள் பேசி, கலெக்டரை சந்தித்து முறையிடுவது என முடிவு செய்துள்ளனர்.அதற்கான எழுத்துப்பூர்வமான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

இதனால், கடந்த முறை ஆனி திருமஞ்சனத்தின்போது நடந்தது போல், பிரச்சினை எழுமோ என அதிகாரிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

  

Tags:    

Similar News