ஆளுநர் பங்கேற்ற அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர்கள்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி கலந்து கொண்டதால் விழாவை 2 அமைச்சர்கள் புறக்கணித்தனர்

Update: 2022-04-18 11:30 GMT

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று பட்டம் வழங்கிய ஆளுநர் ரவி

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 84 வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்றதால் திமுக அமைச்சர்கள் பங்கேற்கவில்லை

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி முனைவர் பட்டம், முதுநிலை மற்றும் இளநிலை நிலை பிரிவுகளில் துறை ரீதியாக முதலிடம் பிடித்த 1014 மாணவ மாணவிகளுக்கு பட்டம் மற்றும் பதக்கங்கள் வழங்கினார்.மேலும் கடந்த ஏப்ரல் 2019 முதல் மே 2021 வரை இரண்டு ஆண்டுகள் நேரடி மற்றும் தொலைதூரக் கல்வியில் படித்து முடித்த 121525 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க ஒப்புதல் அளித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்குமாறு தமிழக ஆளுநர் ரவி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேனீர் விருந்தை புறக்கணித்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எ.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகிய திமுக அமைச்சர்கள் இருவரும் கலந்து கொள்ளவில்லை.

Tags:    

Similar News