தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வது சரியல்ல - கே எஸ் அழகிரி
மாணவர்கள் வேலைவாய்ப்பில் பாதிக்கப்படுவார்கள். அதனால் ஏதாவது ஒரு வகையில் பிரஸ்டீஜ் தேர்வை நடத்த வேண்டும்
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வது சரியல்ல என கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வது சரியல்ல. இதனால் மாணவர்கள் வேலைவாய்ப்பில் பாதிக்கப்படுவார்கள். அதனால் ஏதாவது ஒரு வகையில் பிரஸ்டீஜ் தேர்வை நடத்த வேண்டும். மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை. திமுக அரசு தமிழக பாஜகவுக்கு பிடிக்காத வேண்டாத அரசாகும்.
அதனால் திமுக அரசை பாஜகவினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீராணம் ஏரியில் உள்ள மண்ணை இலவசமாக மக்கள் அள்ளிக்கொள்ள கடலூர் மாவட்ட நிர்வாகம் தமிழக அரசும் அனுமதிக்க வேண்டும் என சிதம்பரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி பத்திரிகை நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.