சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது பத்திரிகையாளர்கள் புகார் மனு
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 20ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில் மாவட்ட ஆட்சியரின் பெயரை தவறாக பயன்படுத்தி பத்திரிகையாளர்களை வெளியேற வேண்டும் என கூறிய தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிதம்பரம் கோட்டாட்சியர் ரவியிடம் இன்று (21.12.21) சிதம்பரம் பத்திரிகையாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அனைத்து பத்திரிகையாளர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழக முதல்வர், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர், காவல்துறை தலைவர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் மனு தபாலில் அனுப்பபட்டுள்ளது.