அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர் எம் கதிரேசன் அவர்களை நியமித்து ஆளுநர் ரவி உத்தரவு;
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர் எம் கதிரேசன் அவர்களை நியமித்து ஆளுநர் ரவி உத்தரவு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர் எம் கதிரேசன் நியமிக்கப்பட்டுள்ளார். துணைவேந்தர் பதவியில் 3 ஆண்டுகள் இருப்பார் என்று ஆளுநர் அறிவித்துள்ளார்.
துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள கதிரேசன் ஆசிரியர் பணியில் 36 ஆண்டுகாலம் அனுபவம் உள்ளவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் கதிரேசன் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் இயக்குநராகவும் ஆர்.எம் கதிரேசன் பணியாற்றியவர்