சிதம்பரம் வந்த தமிழக ஆளுனர் ரவிக்கு சால்வை கொடுத்து வரவேற்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு சிதம்பரம் வருகை தந்த ஆளுநரை துணைவேந்தர் வரவேற்றார்.;
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 84 வது பட்டமளிப்பு விழா நாளை 18ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சென்னையில் இருந்து கார் மூலம் சிதம்பரம் அண்ணாமலை நகருக்கு வருகை தந்தார்.
அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு வருகை தந்த தமிழக கவர்னர் ரவியை துணைவேந்தர் கதிரேசன், பதிவாளர் சீதாராமன் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் வரவேற்றனர்.