வேதனை!! -ராஜா சர் முத்தையா சிலையின் தலையில் கேக் வெட்டி கொண்டாடிய பல்மருத்துவ மாணவர்கள்
அண்ணாமலைப் பல்கலைக் கழக நிறுவனர் ராஜா முத்தையா செட்டியார் உருவ சிலை மீது கேக் வெட்டி கொண்டாடிய பல்மருத்துவ மாணவர்கள்.;
சமூக வலைதளங்களில் வைரலாகிய வேதனைக்குரிய படம்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக நிறுவனர் ராஜா முத்தையா செட்டியார் உருவ சிலை மீது கேக் வெட்டி கொண்டாடிய பல் மருத்துவர்கள், மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் இனிவரும் காலங்களில் மாணவர்கள் இதுபோல் செயல்படக் கூடாது என பல்கலைக்கழக ஊழியர்கள் கோரிக்கை.
கடலூர் மாவட்டம் கல்வியில் பின்தங்கிய பகுதியாக இருந்த நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழகம் வருவதற்கு இரண்டாம் நிறுவனர் இணை வேந்தர் டாக்டர் ராஜா சர் முத்தையா செட்டியார் முக்கிய பங்கு வகித்தார். இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொடங்கி 100 ஆண்டுகள் கடக்க இருக்கும் நிலையில் இங்கு அனைத்து துறைகளும் செயல்பட்டு வருகிறது. பல் மருத்துவமனையில் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்கள் நேற்று இரவு பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் ராஜா முத்தையா செட்டியார் உருவச்சிலை தலையின் மீது கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இது பொதுமக்கள் மற்றும் பல்கலை ஊழியர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் புகைப்படங்கள் வைரல் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. மேலும், இதுகுறித்து பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் கூறுகையில் கடலூர் மாவட்டம் கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக இருந்தது. இதனை அடுத்து ராஜா முத்தையா செட்டியார் இப்பகுதியில் உள்ள கடை கோடி மக்கள் பயன்பெறும் வகையில் இந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இதில் அனைத்து துறைகளும் உள்ளடங்கிய பெரிய கல்வி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சில மாணவர்கள் ராஜா முத்தையா செட்டியார் தலையின் மீது கேக் வெட்டி கொண்டாடிய அது மிகவும் வேதனைக்குரிய செயலாக உள்ளது. ஆகவே இதுபோன்று இனிமேல் மாணவர்கள் தவறான செயல்களில் ஈடுபட கூடாது.. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.