மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5வது நாளாக போராட்டம்

Update: 2021-03-02 15:39 GMT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5வது நாளாக போராட்டம். மருத்துவ கல்லூரி வாயில் முன்பு நின்று கண்டன முழக்கம் செய்து, கட்டணம் செலுத்த வற்புறுத்துவதைக் கண்டித்து போராட்டம் நடந்தது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அரசாணையில் பிறப்பித்த கல்விக் கட்டணத்தை வசூலிக்க வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தை துவக்கி உள்ளனர். மாணவர்களின் இந்த போராட்டம் இன்று 5வது நாளாக நடந்தது. மருத்துவக் கல்லூரி வாயில் முன்பு திரண்ட மாணவ, மாணவிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசாணையில் பிறப்பிக்கப்பட்ட கல்வி கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என முழக்கமிட்டனர்.

போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ மாணவி, ஏற்கெனவே 59 நாள் போராட்டம் நடத்தியதன் விளைவாக அரசு கட்டணம் செலுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் முந்தைய கட்டணத்தை கட்ட சொல்லி வற்புறுத்தி வருவதாக கூறியவர், அவ்வாறு பணம் கட்டாவிட்டால் தேர்வு எழுத முடியாது என கூறுவதாகவும் எனவே மீண்டும் தொடர் போராட்டத்தை நடத்தி வருவதாகவும் கூறினர்.

Tags:    

Similar News