மகளிர் தினம்: பெண் துப்புரவு பணியாளர்களுக்கு புடவைகள்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் துப்புரவு பணியாளர்களுக்கு சேலை வழங்கிய தனியார் பெட்ரோல் பங்க் உரிமையாளர். 100% சதவீத வாக்கு அளிக்க வேண்டும் என விளம்பரத்துடன் ஐந்து ரூபாய் நாணயத்தை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சிதம்பரம் சார் ஆட்சியர்.;
சிதம்பரம் அருகே ஓமக்குளம் பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது இந்த பெட்ரோல் பங்கில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கொரோனா காலகட்டத்தில் தங்களைப் பற்றி கவலைப்படாமல் துப்புரவு பணிகளில் ஈடுபட்ட பெண் ஊழியர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சண்முகசுந்தரம் சேலைகளை வழங்கினார்.
பின்னர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்ற பிரச்சாரத்தை பெட்ரோல் பங்க் நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் சிதம்பரம் சார்-ஆட்சியர் மதுபாலன் கலந்துகொண்டார். அதில் ஐந்து ரூபாய் நாணயம் வைத்த விளம்பரத்துடன் கூடிய துண்டு பிரசுரங்களை சிதம்பரம் சார்ஆட்சியர் மதுபாலன் பொது மக்களுக்கு வழங்கினார். மேலும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்.