சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சுகாதாரத் துறையின் கீழ் கொண்டு வரப்படுவதாக தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்களுடன் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், ராஜா முத்தையா மருத்துவகல்லூரி, இனி சுகாதார துறையின் கீழ் செயல்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அத்துடன் ராணி மெய்யம்மை நர்சிங் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியும் சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.