கடலுாரில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி

Update: 2020-12-26 09:48 GMT

கடலுாரில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் வெள்ளிகடற்கரைக்கு ஊர்வலமாக சென்று கடலில் பாலூற்றி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு வங்கக்கடலில் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை தாக்கத்தினால் கடலூர் மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் 16 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று உயிர்நீத்தவர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாடு மீனவர் பேரவை மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர், பொது நல இயக்கங்கள், சார்பில் கடலூர் வெள்ளிக்கடற்கரைக்கு, தேவனாம்பட்டினம், தாழங்குடா, சொத்திக்குப்பம், சோனங்குப்பம், உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மவுன ஊர்வலமாக சென்று கடலில் பால் ஊற்றியும் மலர்களை வீசியும் தங்களது அஞ்சலியை செலுத்தினர்.மேலும் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றியும் ஒப்பாரி வைத்தும் தங்களது அஞ்சலி செலுத்தி வந்தனர்.

Tags:    

Similar News