கருத்துக்கணிப்புகள் எல்லாம் கருத்து திணிப்புகளாகவே உள்ளது என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
கோயமுத்தூர் சுகுணாபுரம் பகுதியில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் கோவை என்றும் காணாத வளர்ச்சியை அடைந்துள்ளது எனத் தெரிவித்தார். அத்திக்கடவு - அவிநாசி திட்டம், கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2011 க்கு பிறகு கோவையில் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு இல்லை. வாக்களித்த மக்களுக்கு நன்றி உணர்வுடனும், மனசாட்சியோடு பணியாற்றி உள்ளோம் எனத் தெரிவித்தார். கருத்துக்கணிப்புகள் எல்லாம் கருத்து திணிப்புகளாகவே உள்ளது. எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமென்பதே கள நிலவரம் எனவும் அவர் தெரிவித்தார்.