10 கோடி செக்மோசடி வழக்கு ; சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்

10 கோடி செக் மோசடி வழக்கில் சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Update: 2021-10-08 14:15 GMT

சஸ்பெண்ட்  செய்ய்ப்பட்ட சார்பு ஆய்வாளர் முருகன்

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் முருகன். இவர் கடந்த 22.09.2021 ஆம் தேதி சென்னை புரசைவாக்கம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கிளை மேலாளராக பணி புரிந்துவரும் அமித்குமார் என்பவர் கொடுத்த செக் மோசடி புகாரின் பேரில், கீழ்ப்பாக்கம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

போலி காசோலை மூலம் 10 கோடி ரூபாய் பணத்தை மாற்ற முயன்ற போது 8 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். ஆறாவது எதிரியாக கைது செய்யப்பட்ட முருகன் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார். சார்பு ஆய்வாளர் முருகன் மருத்துவ விடுப்பில் இருந்த போது இந்த குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் சார்பு ஆய்வாளர் முருகன் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பணியிடை நீக்கம் செய்து கோவை சரக காவல் துறை துணை தலைவர் முத்துசாமி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News