கோவையில் மழையால் சுவர் இடிந்து வீடு சேதம்
கோவை செல்வபுரம் பகுதியில், மழையால் சுவர் இடிந்து வீடு சேதமடைந்தது.;
கோவை மாவட்டம் முழுவதும், கடந்த மூன்று நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை கோவை மாநகர் முழுவதும் திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனிடையே, கோவை செல்வபுரம் பகுதியில் வீட்டில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
செல்வபுரம் போயர் வீதி பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி, கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக, அப்பகுதியில் குடியிருந்து வருகிறார். காலை 6 மணியளவில் ராஜேஸ்வரி வீட்டில் உறங்கி கொண்டிருக்கும் போது, திடீரென வீட்டில் பக்கவாட்டில் இருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சுற்றுச்சுவர் வெளிப்புறத்தில் இருந்து விழுந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மழை காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததாகவும், தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் ராஜேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.