பருவமழை தீவிரம் - சித்திரைச்சாவடி அணையில் வெள்ளப் பெருக்கு

நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி அணையில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

Update: 2021-06-17 08:53 GMT

சித்திரைச்சாவடி அணையில் வெள்ளப்பெருக்கு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 12-ந் தேதி தொடங்கியது. கடந்த 4 நாட்களாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நொய்யல் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வனப்பகுதியில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி அணையில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனை சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்துச் செல்கிறார்கள். மேலும் நொய்யல் ஆற்றின் வழித்தடங்களில் உள்ள குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. சில நாட்களுக்கு மழை நீடிக்கும் பட்சத்தில் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், குளங்கள் நிரம்ப வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்மழை காரணமாக கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் இந்த அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை இருந்து வருகிறது. சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் நீர்மட்டம் உயர்ந்துவருவதாக குடிநீர் வடிகால் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News