காங்கேயம் காளையுடன் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் காங்கேயம் காளையுடன் வந்து பாரம்பரிய கால்நடைகளை பாதுகாக்க உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.;

Update: 2021-04-03 13:00 GMT

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாதிபதி போட்டியிடுகிறார். அவர் ஆர்.எஸ். புரம் செல்பி ஸ்பாட்டில், தமிழ் பாரம்பரியமான திமிலுள்ள காளைகள் மக்கள் பார்வைக்காக கொண்டு வந்தார். மேலும் காளையை நிறுத்தி அதனுடன் செல்பி எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

குழந்தைகள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் மிகுந்த ஆர்வத்தோடு புகைப்படம் எடுத்து சென்றனர். நமக்கும் பாரம்பரிய கால்நடைகளுக்குமான உறவு என்பது 3000 ஆண்டுகளுக்கும் மேலானது என கூறும் கார்த்திகேயே சிவசேனாபதி , வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பாரம்பரிய கால்நடைகளை பாதுகாக்க உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார்.

Tags:    

Similar News