கோவையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
கோவையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்யைடிக்க முயற்சி செய்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
கோவை செல்வபுரம் ராமமூர்த்தி ரோட்டில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்துக்குள் நள்ளிரவு 2 மணி அளவில் நுழைந்த 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், கல்லால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார்.
இந்த தகவல் ஐதராபாத்தில் உள்ள வங்கி அலுவலகத்துக்கு கிடைத்தது. வங்கி அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் அந்த மர்ம நபர் அங்கு இருந்து தப்பி சென்று விட்டார்.
பின்னர் போலீசார் ஏ.டி.எம். எந்திரத்தை ஆய்வு செய்தபோது ஏடிஎம் எந்திரத்தில் கீழ்ப்பகுதியை அந்த மர்ம நபர் கல்லால் தாக்கி உடைக்க முயன்றதும் அது திறக்காததால் ஆத்திரமடைந்த அவர் ஏடிஎம் எயந்திரத்தின் மானிட்டரை கல்லால் தாக்கி உடைத்து விட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது.
இதனை அடுத்து போலீசார் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
கோவையிஅதில் அந்த மர்ம நபர் கல்லால் தாக்கி ஏடிஎம் எந்திரத்தை உடைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதனை வைத்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகிறார்கள்.