கோவை அருகே பர்னிச்சர் குடோனில் தீ விபத்து

பல இலட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

Update: 2021-01-21 09:00 GMT

கோவை வடவள்ளி பகுதியில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் மோகன் என்பவருக்கு சொந்தமான அவிஸ்கார் என்ற பர்னிச்சர் ஷோரூம் பல பகுதியில் இயங்கி வருகிறது. இதற்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் குடோன்‌ தொண்டாமுத்தூர்‌ ரோடு லட்சுமி நகர்‌ பகுதியில் இயங்கி வருகிறது. இன்று காலை பணியில் இருந்த ஊழியர்கள் குடோனில் லேசான தீ விபத்து ஏற்பட்டதை பார்த்து தாங்களாகவே அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் கட்டுக்கு அடங்காமல் மளமளவென தீ பிடித்து எரிய‌த் துவங்கியுள்ளது .

உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து உள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்தது இரண்டு மணி நேரமாக தீ  எரிந்து வருவதால் பல இலட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து வருகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு எதாவது காரணமா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News