கோவை - சென்னை, கன்னியாகுமரி - சென்னை இடையே சிறப்பு ரயில்கள்

கோவை - சென்னை, கன்னியாகுமரி - சென்னை இடையே நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Update: 2024-01-27 14:25 GMT

சிறப்பு ரயில் - கோப்புப்படம் 

கோவை - சென்னை, கன்னியாகுமரி - சென்னை இடையே நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

கோவையில் இருந்து நாளை(ஜன.28) இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(06043) மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். பின்னர் சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை மறுநாள்(ஜன.29) மதியம் 1.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(06044) இரவு 11.05 மணிக்கு கோவை சென்றடையும். இந்த சிறப்பு ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, அரக்கோணம் வழியாக இயக்கப்படுகிறது.

இதேபோல் கன்னியாகுமரி-சென்னை எழும்பூர் இடையேயும் நாளை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலானது கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை வந்தடையும். பின்னர் சென்னை எழும்பூரில் இருந்து திங்கள்கிழமை(ஜன.29) மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது.

இந்த சிறப்பு ரயில் நாகர்கோவில், வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய இடங்களில் நின்று செல்கிறது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவுகள் தொடங்கிவிட்டன. கூடுதல் நெரிசலைக் குறைக்கும் வகையில், இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News