கோவை மாநகராட்சியில் நாளை தடுப்பூசி முகாம் இல்லை

கோவை மாநகராட்சியில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.;

Update: 2021-07-13 14:39 GMT

தடுப்பூசி முகாமில் காத்திருந்த மக்கள்

கோவை மாநகராட்சி பகுதியில், சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வந்தன. பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

எனினும், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் அவ்வப்போது நிறுத்தப்படுகின்றன. பத்து நாட்களாக கோவை மாநகராட்சியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறவில்லை. அதன் பிறகு கோவை மாநகராட்சியில் நேற்றும், இன்றும் 31 மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில் தடுப்பூசி இருப்பு குறைவு காரணமாக நாளை கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்படாது என கோவை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News