கொரோனாவை கட்டுப்படுத்த மாஸ் கிளினீங்: கோவை மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கோவை மாநகராட்சி பகுதிகளில் மாஸ் கிளினீங் மேற்கொள்ள, ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.;
துப்புரவு பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா
கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த கோவை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த மாதத்தில் தினமும் 2,000 வரை இருந்த கொரோனா நோய் தொற்று பாதிப்பு தற்போது மாநகராட்சி நிர்வாகம் சுகாதாரத்துறையின் தீவிர தடுப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளால் 500 க்கும் கீழ் குறைந்துள்ளது.
கொரோனா முழுமையாக கட்டுப்படுத்த வீடுவீடாக களப்பணியாளர்கள் மூலமாக உடல் பரிசோதனை பணிகள் அனைத்தும் மண்டலங்களின் தூய்மை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அவ்வகையில், கோவையில் அனைத்து மண்டலங்களிலும் தூய்மைப் பணி தீவிரப்படுத்தப்பட்டு தினமும் மூன்று இடங்களில் மாஸ் கிளினீங் செய்ய மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக இன்று 86 ஆவது வார்டு உக்கடம் லால்பேட்டை பகுதியில் 50க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மாஸ் கிளினீங் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.