கோவை மாநகராட்சி சாலைகளின் தரத்தை ஆய்வு செய்த ஆணையாளர்
கோவை மாநகராட்சி சாலைகளின் தரம், வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப்பணிகளை, மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்காரா ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் மற்றும் தூய்மைப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்காரா ஆய்வு செய்தார். பொன்னையராஜபுரம் சுகாதார அலுவலகத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களிடம் உரையாடிய அவர், கட்டாயம் முகக்கவசம் அணிந்து பணியாற்றவும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தினார்.
இதை தொடர்ந்து, கோவை லீலா அபார்ட்மெண்ட் சாலையில், 55 இலட்ச ரூபாய் செலவில் அமைக்கப்படும் சாலைப்பணிகளை ஆணையாளர் ராஜகோபால் சுன்காரா பார்வையிட்டார். அப்போது, சாலையின் தரத்தை ஆய்வு செய்தார். இதேபோல செல்வபுரம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 37.50 இலட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டுமான பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.