கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் - கலெக்டர், ஆணையாளர் ஆய்வு
கோவை மாநகராட்சியில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, கலெக்டர், ஆணையாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.;
கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக தொற்று பரவல் குறைந்து வருகிறது.
இந்நிலையில், கோவை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்புப் பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர், இன்று ஆய்வு செய்தனர். அவ்வகையில், சுந்தராபுரம் பகுதியில் உள்ள தக்காளிச்சந்தை மற்றும் உழவர்சந்தை ஆகிய இடங்களில் இருவரும் கள ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது, பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், கொரோனா வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினர்.