திருமண நிகழ்ச்சிகளை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் - கோவை மாநகராட்சி ஆணையாளர்

கொரோனா தொற்று பரவலை தடுக்க, திருமண நிகழ்ச்சிகளை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என்று கோவை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2021-06-24 14:15 GMT

கோவையில், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்குகள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநகராட்சியில் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் குறித்த விபரங்களை,  மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டுமென, ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா அறிவுறுத்தினார்.

மேலும், http//covid.ccmc.gov.in/ccmc/bookingintimation என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டுமெனவும், அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று, மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தினார்.

Tags:    

Similar News