கோவை மாநகராட்சி: களப்பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுரை..!

வீடு தவறாமல் சோதனை செய்ய வேண்டும் - களப்பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுரை

Update: 2021-06-22 14:00 GMT

கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்காரா 

கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக களப்பணியாளர்கள் வீடு வாரியாக சளி, காய்ச்சல், உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு கண்டறிதல் உள்ளிட்ட சோதனைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 62 வது வார்டு பகுதியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்காரா ஆய்வு செய்தார்.

அப்போது வீடு தவறாமல் வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார். இதையடுத்து மசக்காளி பாளையம் பகுதியில் நடைபெற்ற தூய்மைப் பணிகளை ராஜாகோபால் சுன்காரா ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News