கோவை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
கோவை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட ராமநாதபுரம் மற்றும் நஞ்சுண்டாபுரம் பகுதிகளில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு கோவை ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா , இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் முன்களப் பணியாளர்கள் வீடு தவறாமல் சளி, காய்ச்சல், ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் நஞ்சுண்டாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் மற்றும் பதிவேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு விபரங்களை கேட்டறிந்தார்.