கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்புப்பணிகள் - ஆணையாளர் ஆய்வு
கோவை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப்பணிகளை, மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா ஆய்வு செய்தார்.;
கோவை மாவட்டத்தில். மாநகராட்சி பகுதிகளில் அதிகளவில் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. கொரோனா பரவலைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகளை, கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா ஆய்வு செய்தார். கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மொத்த காய்கறி சந்தை, சாய்பாபா காலனி சந்தை, பூ மார்க்கெட் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் வியாபாரிகளிடம் முககவசம் அணியவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும், அரசின் வழிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து மெக்ரிக்கர் சாலையில் தூய்மை பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்கும் பணிகளை, ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா பார்வையிட்டார்.