கோவையில் ஒரே நாளில் 1328 பேர் வேட்பு மனுத்தாக்கல்
இறுதி நாளான நாளை அதிக எண்ணிக்கையிலான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இப்பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வேட்பு மனுத் தாக்கல் செய்து வருகின்றனர். திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதாலும், நாளை இறுதி நாள் என்பதாலும் அதிகளவிலான நபர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1328 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதனால் இதுவரை போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 1602 ஆக அதிகரித்துள்ளது.
கோவை மாநகராட்சியில் இதுவரை 839 பேரும், 7 நகராட்சிகளில் இதுவரை 413 பேரும், 33 பேரூராட்சிகளில் 350 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இறுதி நாளான நாளை அதிக எண்ணிக்கையிலான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.