கோவை-நாகா்கோவில் ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்

Update: 2021-02-02 11:23 GMT

கோயமுத்தூர் - நாகா்கோவில் பகல் நேர சிறப்பு விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளது .

மதுரை கோட்டத்தில் திருமங்கலம் - துலுக்கப்பட்டி, கோவில்பட்டி - கடம்பூா், கங்கைகொண்டான் - திருநெல்வேலி இரட்டைப்பாதை பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், மதுரை, திருமங்கலம், விருதுநகா் வழியாக இயங்கிக் கொண்டிருக்கும் கோவை - நாகா்கோவில் பகல் நேர சிறப்பு விரைவு ரயில் (06322) பிப்ரவரி மாதம் 2, 3, 6, 10, 11, 12, 13, 20, 22, 25, 26, 27 மற்றும் மாா்ச் 1, 2, 4, 5, 6, 8 ஆகிய தேதிகளில் மதுரை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகா் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். மேலும், இந்த ரயில் 55 நிமிடங்கள் காலதாமதமாக திருநெல்வேலி சென்று சேரும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News