பொள்ளாச்சி பாலியல் வழக்கு கைதியிடம் சி.பி.ஐ விசாரணை
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான ஹெரைன்பாலை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐக்கு கோவை மகளிர் நீதிமன்றம் அனுமதி.
கோவை மகளிர் நீதிமன்றத்தில் சிபிஐ பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான ஹெரைன்பால் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு மனு அளித்திருந்தனர். நீதிமன்ற காவலில் இருக்கும் ஹெரைன் பாலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ மனு சமர்ப்பித்திருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.
மேலும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஏற்கனவே கைதான 5 பேர் சேலம் மத்திய சிறையில் உள்ள நிலையில் கடந்த 5ம் தேதி அதிமுக நிர்வாகி அருளானந்தம், பாபு, ஹெரைன்பால் உள்ளிட்ட மூவரை கைது செய்து வழக்கு விசாரணையை துரிதப்படுத்த சிபிஐ அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் ஹெரைன்பால் என்பவரை மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க முன்வந்துள்ளது.
மேலும் ஹெரைன்பால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் அவரிடம் மேலும் விசாரணை நடத்த தேவைகள் இருப்பதாக வலியுறுத்தி மனுவில் வலியுறுத்தியுள்ளனர். மேலும் சி.பி.ஐ இரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.