முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருப்பவர் உஷா. இவர் பள்ளிகளின் உரிமம் புதுப்பித்தலுக்கு லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சோதனை செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருப்பவர் உஷா. இவர் பள்ளிகளின் உரிமம் புதுப்பித்தலுக்கு லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டவுன்ஹால் பகுதியில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதைதொடர்ந்து கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள முதன்மை கல்வி அலுவலரின் முகாம் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் பணம் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அப்பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், புத்தாண்டு பரிசு மற்றும் பள்ளி உரிமம் புதுப்பித்தலுக்காக கொடுக்கப்பட்ட லஞ்சப்பணம் என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.