கோவை அருகே காட்டு யானை தாக்கி காவலாளி உயிரிழப்பு

மருதமலை பிரதான சாலையில் காலை நேரத்தில் நடந்து சென்ற முதியவரை காட்டு யானை தாக்கிய சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-12-28 03:00 GMT

கோவை அருகே காட்டு யானை தாக்கியதில், சாலையில் நடந்து சென்றவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது நியாஷ் (65). இவர் கடந்த ஆறு மாதங்களாக மருதமலை சாலை சட்டக்கல்லூரி அருகே உள்ள தனியார் கட்டுமான பணியிடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் முகமது நியாஷ் டீ குடிக்க மருதமலை சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த ஒற்றை காட்டு யானை முகமது நியாசை தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஒரு மாதமாக காட்டு யானைகள் 2 குழுக்களாக பிரிந்து சுற்றி வரும் நிலையில் ஒரே மாதத்தில் அப்பகுதியில் 4 பேர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளனர்.

மார்கழி மாதம் என்பதால் காலை நேரத்தில் மருதமலை கோவிலுக்கு அதிக பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மருதமலை பிரதான சாலையில் காலை நேரத்தில் நடந்து சென்ற முதியவரை காட்டு யானை தாக்கிய சம்பவம், பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News