கோவை போத்தனூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

குழந்தைகள் விளையாடும் பூங்கா பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோவை மாநகராட்சி ஏற்பாடு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்

Update: 2020-12-26 09:45 GMT

கோவை போத்தனூர் காவல் நிலையம் அருகே உள்ள சாய் நகர், சத்ய நாராயண நகர், பாத்திமா நகர், உள்ளிட்ட மூன்று நகரின் மையப் பகுதியில் 65 சென்ட் ரிசல்ட் சைட் இடம் உள்ளது. இதனை குழந்தைகள் விளையாடுவதற்கும் பூங்கா அமைப்பதற்கும் அப்பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் திடீரென்று கோவை மாநகராட்சி இந்த இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இரண்டு முறை வேலையை நடத்த விடாமல் தடுத்தனர். இருப்பினும் இன்று அப்பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் வருவதாக தகவல் கிடைத்ததை ஒட்டி இப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் வராமல் தடுக்க ஆர்ப்பாட்டம் செய்வதற்கு முயற்சித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போத்தனூர் காவல் துறையினர் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் போலீசார் அங்கு திரண்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பும் கோவை மாநகராட்சி ஆணையர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே நாங்கள் கலைந்து செல்வோம் என்று பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டுள்ளனர். இதனால் பரபரப்பாக அப்பகுதி காணப்பட்டது.

Tags:    

Similar News