இளைய தலைமுறை எதையும் சாதிக்கக்கூடிய புதிய தலைமுறை : கனிமொழி பேச்சு
மயிலாப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி இளைய தலைமுறை எதையும் சாதிக்கக்கூடிய புதிய தலைமுறை என்று பேசினார்.
சென்னை மயிலாப்பூரிலுள்ள பி.எஸ் மேல்நிலைப்பள்ளியில் அன்பின் பாதை அறக்கட்டளை, KEH குழுமம் மற்றும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு அவர்கள் இணைந்து நடத்தும் "எங்கள் மயிலாப்பூர்" என்ற பள்ளிகளுக்கான மாபெரும் அறிவுசார் மற்றும் கலைத் திறன் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பரிசு கோப்பைகளை வழங்கினார். அப்போது கனி மொழி எம்பி பேசியதாவது.
அனைத்து பெருமைகளும் சரியான சதவிகிதத்துடன் கொண்டு மத நல்லிணக்கத்திற்க்கு எடுத்துக்காட்டாக இருக்கும் இடம் மைலாப்பூர்.அதே போல் பழமை, பெருமை, புதுமை என மூன்றும் இருக்க கூடிய இடம் மயிலாப்பூர் தான்
வெற்றி தோல்வி என்பது நமது எதிர்காலத்தை முடிவு செய்வது இல்லை, அதனையும் தாண்டி நிறைய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆகையால் தோல்வியை கண்டு மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்.
இங்கு கற்பகாம்பாள் மெஸ்சுக்கும் இடம் இருக்கு, அதே நேரத்தில் பீட்சா ஹட்டுக்கும் இடம் இருக்கு. ராக் இசைக்கும் இடம் உண்டு, கர்நாடக சங்கீதத்திற்கும், பறை இசைக்கும் இடம் உண்டு.
அப்பர்,சம்பந்தர் போன்றவர்கள் பாடிய திருத்தளமும் உண்டு,செண்ட்தாமஸ் வந்து சென்ற இடம் என்ற பெருமையாக சொல்ல கூடிய இடம் மயிலாப்பூர்.
கொரோனா காலத்தில் தனிமை என்னும் கொடுமையை சமாளித்து தற்போது மாணவர்கள் பள்ளிகளுக்கு வரத்துவங்கியுள்ளனர். கொரோனா என்னும் பெரும் பேரிடரை எதிர்கொண்டு அதனை தாண்டி வந்த இந்த இளைய தலைமுறை எதையும் சாதிக்கக்கூடிய புதிய தலைமுறை இவ்வாறு அவர் கூறினார்.
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.