தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களின் நலன் முக்கியம் என்பதால் மிக நிதானமாக முடிவெடுத்து வருகிறோம். என்ன தான் மிக பாதுகாப்போடு தேர்வை நடத்தினாலும் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. மாணவர்களின் எதிர்காலம் என்பதால் மிக கவனத்துடன் முடிவு எடுக்க உள்ளோம் என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், மற்ற மாநிலங்களில் எடுத்த முடிவின் அடிப்படையில் மதிப்பெண் கொடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம். ஆலோசனை முடிவுகளை முதல்வரிடம் தெரிவித்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.